குரங்கு அம்மைத் தொற்று ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களில் அதிகமாக பரவும் அபாயம் காணப்படுகின்றது என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர எச்சரித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளுக்கு அமைய இந்த விடயம் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான செயற்பாடுகளை தவிர்ப்பதன் ஊடாக குரங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்த சந்திம ஜீவந்தர, தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களில் 99 சதவீதமானவர்கள் ஆண்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொற்றாளர்களில் 95வீதமானவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் என உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இலங்கையில் தற்போது குரங்கு அம்மை தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். டுபாயில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கே தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவருடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Discussion about this post