இலங்கையில் இன்று பல பொருள்களின் விலைகள் சடுதியாக உயர்த்தப்பட்டுள்ளன. பொருள்களின் விலைகள் உயர்ந்து வருவதால் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் டீசலின் விலையை 75 ரூபாவாலும், பெற்றோலின் விலையை 50 ரூபாவாலும் உயர்த்தியுள்ளது.
அதேநேரம், கோதுமை மா விநியோக நிறுவனங்களில் ஒன்றான செரண்டிப் நிறுவனம் கோதுமை மாவின் விலை கிலோவுக்கு 35 ரூபா அதிகரித்துள்ளது. மற்றொரு விநியோக நிறுவனமான பிறிமா கோதுமை மாவின் விலை 30 முதல் 40 ரூபா வரை அதிகரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
மறுபுறத்தில், பாணின் விலை 20 தொடக்கம் 30 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பணிஸின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
Discussion about this post