நாட்டில் தற்போது நிலவும் சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் பிரச்சினைக்கு இன்னும் 10 நாட்களுக்குள் தீர்வை பெற்று கொடுக்க கூடியதாக இருக்கும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 10 பேர் அணிக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.
இதன்போது ஜனாதிபதி இவ்வாறு உறுதியளித்தார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்தார்.
அத்துடன், இது தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு தமது அணி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தது எனவும் அவர் கூறினார்.
Discussion about this post