இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், இலங்கையில் நிலவும் அரசியல் நிச்சயமற்ற தன்மை காரணமாக, இலங்கை டொலர் பத்திரங்களில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் அவற்றை விற்க ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பிரபல வர்த்தக இணையத்தளமான Bloomberg வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இது தெரியவந்துள்ளது.இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு கடந்த சில நாட்களாக டொலர் பத்திரங்களை விற்பனை செய்ய சந்தையில் கடும் போட்டி நிலவி வருகிறது.
கடன் மறுசீரமைப்புஇலங்கையின் அரசியல் தலைமை மாற்றம், கடன் மறுசீரமைப்புப் பேச்சுக்களை சீர்குலைக்கக் கூடும் என்றும், முதலீட்டாளர்கள் கலக்கமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர்களுக்கான வேலைத்திட்டத்தின் நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாக கூறப்பட்டதை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தமையும் பலதரப்பு கடன் வழங்குனர்களுடன் இணக்கம் காணப்பட்ட கடன் மறுசீரமைப்பு கட்டமைப்பிற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தமையும் இந்த நிலைமையை பாதித்துள்ளதாக இணையத்தளம் குறிப்பாக சுட்டிக்காட்டியுள்ளது.
Discussion about this post