எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படும் நிலையில், அங்கு மோதல்கள் ஏற்படாதிருக்க பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் அமைதியைப் பேணுவதற்காக உரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொலிஸ்மா அதிபர் பணித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகனங்கள் வரிசையில் நிற்கும்போது போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பணிப்புரைக்கு அமைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
நோயாளர்காவு வண்டி, தீயணைப்பு வாகனங்கள், சுற்றுலாத்துறைசார் வாகனங்கள், விவசாயச் செய்கையாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து எரிபொருள் வழங்க வேண்டும் என்றும் பணிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post