இலங்கையில் எரிபொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக எரிபொருள்களின் விலைகள் லீற்றருக்கு சுமார் 200 ரூபா வரையில் உயர்த்தப்பட்டிருந்த நிலையில், தற்போது சிறியளவு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 10 மணி முதல் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வருகின்றது.
92 ஒக்டேன் ரக பெற்ரோலின் புதிய விலை 450 ரூபா என்றும், 95 ஒக்டேன் ரகப் பெற்றோலின் புதிய விலை 540 ரூபா எனவும், டீசலின் புதிய விலை 440 ரூபா எனவும், சுப்பர் டீசலின் புதிய விலை 510 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post