நாடளாவிய ரீதியில் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், இலங்கையில் உயிர்த்த ஞாயிறுத் தினத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் உயிரிந்தவர்களுக்கு நீதி கோரிப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
கொழும்பு, புதுக்கடையில் இருந்து காலி முகத்திடல் வரையில் ஒரு குழுவினர் இறந்தவர்கள் போன்று உடையணிந்து நேற்று அமைதியான முறையில் நடைபயணம் மேற்கொண்டனர்.
அதேநேரம், காலிமுகத்திடல் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் போராட்டத்திலும் இன்று உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் 21 ஆம் திகதி தேவாலயங்களில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் நூற்றுக் கணக்கானவர்கள் உயிரிழந்ததுடன், பல காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
Discussion about this post