இன்று அதிகாலை 3 மணிமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தானம் மற்றும் ஐ.ஓ.சி. நிறுவனம் ஆகியவை இந்த அறிவிப்பை விடுத்துள்ளன.
ஒக்டென் 92 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 420 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒக்டென் 95 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 450 ரூபாவாகவும், ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலையை 400 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் சுப்பர் டீசலின் புதிய விலை 445 ரூபாவா அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கட்டுப்பாடுகளை இன்று நடைமுறைக்கு வரும் வகையில் விதித்துள்ளது.
மோட்டார் சைக்கிள்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3 ஆயிரம் ரூபாவுக்கும் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.
கார்கள், வேன்கள் மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு, 10 ஆயிரம் ரூபாவுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.
Discussion about this post