பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இலங்கையில் இரு பத்திரிகைகள் இன்று முதல் அச்சுப் பதிப்பை நிறுத்தியுள்ளன.
அச்சுத்தாள் தட்டுப்பாடு மற்றும் ஏனைய பொருள்களின் விலையேற்றம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்தப் பத்திரிகைகளின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதலான தி ஐலணட் மற்றும் சிங்கள நாளிதளான திவயின ஆகியவையே அச்சுப்பதிப்பை நிறுத்தியுள்ளன. அவை இனிமேல் மின்பதிப்பாகவே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள ஏனைய பத்திரிகைகளும் அச்சுத்தாள் மற்றும் ஏனைய பொருள்களைப் பெறுவதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன.
டொலர் பிரச்சினையால் ஏற்பட்டுள்ள அச்சுத்தாள் இறக்குமதிப் பிரச்சினை மற்றும் நாளாந்தம் நடைமுறைப்படுத்தப்படும் மின்வெட்டு ஆகியவற்றால் அவை பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன என்று கூறப்படுகின்றது.
Discussion about this post