இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அனைத்துத் துறைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டில் சுமார் 7 ஆயிரம் பேர் இருதய சத்திர சிகிச்சைக்காகக் காத்திருக்கின்றனர் என்று அரச தரப்பு சார்பில் நாடாளுமன்றில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் 4 ஆயிரம் பேர், கண்டியில் 2 ஆயிரம் பேர், யாழ்ப்பாணத்தில் 1000 பேர் என நாட்டில் சுமார் 7 ஆயிரம் பேர் இருதய சத்திர சிகிச்சைக்காகக் காத்திருக்கின்றனர். இவர்களுக்கான சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மருத்துவர்கள் உட்பட மருந்து, உபகரணங்களுக்கான பற்றாக்குறை காணப்படுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post