ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தயாசிறி ஜயசேகர தலைமையிலான குழு தீர்மானித்ததன் மூலம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) மூன்றாக உடைந்துள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக அண்மையில் உறுதிப்படுத்தப்பட்ட ஜயசேகர, பிரேமதாசவுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.
திடீர் அரசியல் எழுச்சிஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கின்றனர்.செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கூட்டணியின் ஒரு பகுதியாக விஜயதாச ராஜபக்ச போட்டியிடுகிறார்
சுதந்திரக் கட்சியின் மற்றுமொரு நாடளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளித்து வருகின்றனர்இந்தநிலையிலேயே தயாசிறி, சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.எஸ்.டபில்யூ,ஆர்.டி பண்டாரநாயக்கவினால் தோற்றுவிக்கப்பட்ட இந்த பழமைக்கட்சி இன்று சிதறிப்போயுள்ளது.அதேநேரம் சிதறிப்போன ஐக்கிய தேசியக்கட்சி மீண்டும் ரணில் விக்ரமசிங்கவின் திடீர் அரசியல் எழுச்சியால் புத்துயிர் பெற்று வருகிறது.
சுதந்திரக் கட்சியின் மற்றுமொரு நாடளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளித்து வருகின்றனர்
இந்தநிலையிலேயே தயாசிறி, சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.எஸ்.டபில்யூ,ஆர்.டி பண்டாரநாயக்கவினால் தோற்றுவிக்கப்பட்ட இந்த பழமைக்கட்சி இன்று சிதறிப்போயுள்ளது.
அதேநேரம் சிதறிப்போன ஐக்கிய தேசியக்கட்சி மீண்டும் ரணில் விக்ரமசிங்கவின் திடீர் அரசியல் எழுச்சியால் புத்துயிர் பெற்று வருகிறது.
Discussion about this post