இலங்கையிலும் அறியாமையுடைய, சர்வாதிகார நாடுகளைப் போன்றே சில சம்பவங்கள்
நடைபெறுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.
தவறிழைத்தவர்கள் சம்மந்தமாக விசாரணைகளை மேற்கொள்பவர்கள் கைது
செய்யப்படும் சம்பவங்கள் உலகில் எங்கும் நடை பெறுவதில்லை எனவும் அவர்
கூறினார்.
அரசியல் பழிவாங்கல்கள் சம்மந்தாமக விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு
சென்று சாட்சியம் வாங்கிய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே
அவர் இவ்வாறு கூறினார்.
Discussion about this post