நீர்கொழும்பில் இருந்து அவுஸ்திரோலியாவுக்கு படகில் செல்ல முற்பட்ட 38 பேரை தென்கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் நேற்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
இயந்திர படகு ஒன்றின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 6 சிறுவர்கள், 6 பெண்கள் உள்ளடங்கலாக 38 பேரே கைது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தற்பொழுது அம்பாறை – பாணமை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து, நேற்று அதிகாலை 2 மணியளவில் கடல் பகுதியில் கண்காணிப்பில் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.
அந்தச் சந்தர்ப்பதில் அவுஸ்ரோலியா நோக்கிப் புறப்பட்ட படகை கடற்படையினர் சுற்றிவளைத்து சோதனையிட்டனர். அதில் இருந்த 38 பேரும் வாழைச்சேனை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும், பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்றும் கடற்படையினர் தெரிவித்தனர்.
Discussion about this post