இலங்கையில் நிச்சயம் போர் குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
யுத்த குற்ற விசாரணைகளை முன்னெடுப்பது மாத்திரமின்றி , சிறுபான்மையினரின்
உரிமைகளையும் மதிக்க வேண்டும். சிறுபான்மையினரின் உரிமைகளை
பாதுகாப்பதற்கான பொறுப்பும் கடமையும் பெரும்பான்மையிருக்கும் இருக்கிறது.
மேற்குலக நாடுகளில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை
எனில் அதுவே பாரியதொரு குற்றமாக கருதப்படும் என்று நோர்வே
பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள ஹம்ஷாயினி குணரத்னம் தெரிவித்தார்.
கலந்துரையாடலுக்கான எந்தவொரு அழைப்பினையும் நான் ஏற்றுக் கொள்வேன். நான்
புலம் பெயர் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துபவள் இல்லை. நான் நோர்வே
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவராவேன். எவ்வாறிருப்பினும் யார்
அழைப்பு விடுத்தாலும் அதனை ஏற்று கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு நான்
தயாராகவுள்ளதாகவும் ஹம்ஷாயினி குணரத்னம் தெரிவித்தார்.
Discussion about this post