இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களை இலங்கை மத்திய வங்கி மதிப்பிட்டுள்ளது.
ஜூலை மாத இறுதியில் இலங்கையின் கையிருப்பானது ஆயிரத்து 815 மில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்டது என்று இலங்கை மத்திய வங்கி குறிப்பிடுகிறது. தற்போது இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு ஆயிரத்து 854 மில்லியன் டொலர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்புகளில் சீன மக்கள் வங்கியின் 1.5 பில்லியன் அமெரிக்க டொலருக்குச் சமமான இடமாற்று வசதியும் உள்ளடங்கும். இது பயன்பாட்டுக்கான நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Discussion about this post