இலங்கையில் புதிய ஜனாதிபதியாக அதிககூடிய வாக்குகளை பெற்று அனுகுமார திசாநாயக்க தெரிவாகியுள்ளார்.
இலங்கையில் நேற்று நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் மக்களின் மனதை வென்று அனுர வெற்றியீட்டுள்ளார்.
குறைந்த வயதில் பதவியேற்றும் ஜனாதிபதி
தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டானது 5 வருடத்தில் தனது 3% வாக்கு வங்கியை 50% இற்கு மேலாக உயர்த்தியுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட 21 அமைப்புக்களின் அரசியல் கூட்டாக அனுர குமார திசனாயக்கவை முன்னிறுத்தி இம்முறை இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்கியது.
73 பேரைக்கொண்ட தேசிய மக்கள் சக்தியின் மத்திய குழுவில் 6 தமிழர்கள் உள்ளனர். இதில் இராமலிங்கம் சந்திரசேகரன், அருண் ஹேமச்சந்திரா , பேராதனை பல்கலைகழக முன்னாள் பேராசிரியர் விஜயகுமார், சறோஜா போல்ராஜ், கிட்ணன் செல்வராஜ், கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோரும் உள்ளனர்.
இவர்களில் அருண் மாத்திரமே வடக்கு-கிழக்கை சேர்ந்தவர். 54 வயதேயான அனுரகுமார திசநாயக்க களனி பல்கலைக்கழக பெளதிக விஞ்ஞான பட்டதாரியாவார்.
இன்று மாலை இலங்கையின் 9 வது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் அனுர, சந்திரிகா குமாரதுங்கவுக்கு அடுத்ததாக இலங்கையில் குறைந்த வயதில் பதவியேற்கும் ஜனாதிபதியாகளில் ஒருவராக இருப்பார்.
Discussion about this post