பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு வருவாயை ஈட்டித்தரும் ஏற்றுமதியாக வாழைப்பழம் மாறியுள்ளது.
இலங்கையில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் கதலி வாழைப்பழம் தற்போது சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய பழமாக மாறியுள்ளது.
நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வாழைப்பழங்களின் முதலாவது தொகுதி சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கதலி வாழைப்பழங்களின் முதல் தொகுதி எதிர்வரும் 26ஆம் திகதி டுபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
Discussion about this post