1.5 மில்லியன் லீட்டர் எரிபொருள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக குற்றம்சாட்டி, ஈரானிய(iran) புரட்சிகர காவல் படையினர் எரிபொருள் தாங்கி ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை (22) அவர்கள் அந்த கப்பலை பாரசீக வளைகுடாவில் தங்கள் காவலில் எடுத்துக்கொண்டனர்.
எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பல்
மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவின் கொடியின் கீழ் எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளது.
கப்பலில் இருந்த12 பேர் கொண்ட ஊழியர்களில் இலங்கையர்களும் இருப்பதாக வெளிநாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post