இலங்கையில் சில பொருள்களுக்கான இறக்குமதி தடை நீக்கப்படவுள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அறிவித்துள்ளார்.
அழகுசாதன பொருள்கள், வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் ஏற்றுமதி நோக்கிலான ஆடை உற்பத்தி மூலப் பொருள்கள் போன்ற சில பொருள்களுக்கான இறக்குமதி தடையே நீக்கப்படவுள்ளது.
இறக்குமதித் தடை நீக்கம் எதிர்வரும் இரு வாரங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அந்தத் துறைகளின் பணியாளர்களால்ல் தொடர்ந்து முன்வைக்கப்படும் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post