இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்தும் கோரிக்கையை ஆதரிக்கின்றேன் என்று கனேடிய கனேடிய எதிர்க்கட்சியான கன்சவேடிவ் கட்சியின் தலைமைக்கான தேர்தலில் முன்னணியில் உள்ள பியர் பொலிவேரா (Pierre Poilievre) தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், இலங்கையின் தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு சர்வதேச நீதிமன்றத்தை உறுதி செய்ய கனடா அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்பைக் கொண்டு வருவோம் என்று உறுதியளித்துள்ளார்.
தற்போது சிங்கப்பூரில் இருக்கும் கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கான கோரிக்கைகளில் இலங்கையின் மனித உரிமை சட்டத்தரணிகளுடன் இணைந்து செயற்படுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை கன்சவேட்டிவ் கட்சிக்கான புதிய தலைவருக்கான தேர்தலில் அக்கட்சியின் உறுப்பினர்கள் தற்போது வாக்களித்து வருகின்றனர். அதன் முடிவுகள் வரும் செப்ரெம்பர் 10 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். இதில் கன்சவேட்டிவ் கட்சியின் முன்னாள் பிரதமர் ஸ்ரீபன் காப்பர் உட்பட பலரின் ஆதரவைப் பெற்றிருக்கும் பியர் பொலிவேராவே வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Discussion about this post