இலங்கைக்கு விஜயம் செய்யும் அவுஸ்திரேலியர்களுக்கான அறிவுறுத்தல்களை அந்நாட்டு அரசாங்கம் மீளவும்
கவனத்தில் கொள்ளுமாறு அறிவித்துள்ளது.
நேற்று (13) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இலங்கைக்கு விஜயம் செய்யும் போது எதிர்ப்புகள், போராட்டங்கள் போன்றவை தொடர்பில் அவதானமாக
இருக்குமாறும் அவ்வாறான பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது குடிமக்களுக்கு
அறிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் சில உணவுப் பொருட்களுக்கும் மருந்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என
அவுஸ்திரேலிய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், கிரெடிட் கார்ட் மோசடி, அதிக கட்டணம் வசூலித்தல், போலி பொருட்களை விற்பனை செய்தல், பாலியல்
துன்புறுத்தல், கொள்ளை போன்ற குற்றங்களும் நடக்கலாம் என்பதால் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என
அவுஸ்திரேலிய அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
Discussion about this post