இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படும் 40 ஆயிரம் மெற்றிக்தொன் டீசலை ஏற்றிய கப்பல் நேற்று கொழும்பை வந்தடைந்தது. இந்தியக் கட ன் திட்டத்தின் கீழ் இலங்கைக்குக் கிடைக்கும் இறுதி டீசல் தொகை இதுவாகும்.
நேற்றுமாலை கொழும்பை வந்தடைந்த கப்பலில் உள்ள டீசலை சந்தைக்கு விநியோகிக்க இன்னும் 3 நாள்கள் தேவைப்படும் என்று இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அதேவேளை, நாட்டில் டீசல் மற்றும் பெற்றோலுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது. டீசல் மற்றும் பெற்றோலைப் பெறுவதற்காக மக்கள் கிலோமீற்றர் கணக்கில் நீளும் வரிசைகளில் காத்திருப்பதைக் காண முடிகின்றது.
Discussion about this post