நேற்றுடன் முடிந்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 76 ஆயிரம் மெற்றிக்தொன் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
36 ஆயிரம் மெற்றிக்தொன் பெற்றோலும், 40 ஆயிரம் மெற்றிக்தொன் டீசலும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, நாட்டின் நேற்றும் எரிபொருள்களுக்குத் தட்டுப்பாட்டு நிலைமையே காணப்படுகின்றது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
டீசல் மற்றும் மண்ணெண்ணெயைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் காத்திருக்க நேரிட்டுள்ளது என்றும், பல இடங்களில் மண்ணெண்ணெயைப் பெறமுடியாதுள்ளது என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். டீசல் கிடைக்காமையால் ஆத்திரமுற்ற சாரதிகள் கொழும்பு கண்டி வீதியில், கடவத்த பகுதியில் வாகனங்களை வீதிக்குக் குறுக்காக நிறுத்திப் போக்குவரத்தை தடை செய்து நேற்றுப் போராட்டம் நடத்தினர்.
அதேபோன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றது என்று எரிவாயு சிலிண்டர் விநியோக நிறுவனங்கள் கூறுகின்ற போதும், பொதுமக்கள் எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவதற்கு காத்திருக்க வேண்டிய நிலைமையே நாட்டில் காணப்படுகின்றது.
Discussion about this post