இலங்கைக்கு நேற்று பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளேர் ஓ நில் கொழும்பில் முத்தரப்பு சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஆகியோருடன் அவர் பேச்சுகளை நடத்தவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது சம்பந்தமாகவும், ஆட்கடத்தலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நகர்வகள் சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகில் ஆஸ்திரேலியா செல்வோர் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. எனவே, கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்தி, ஆட்கடத்தலை முறியடிப்பது குறித்தும் அவதானம் செலுத்தப்படவுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவிகளை வழங்குவது சம்பந்தமாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.
Discussion about this post