இலங்கையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் சீன கப்பலின் நடமாட்டத்தை அவதானித்துக்கொண்டிருப்பதாக இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு செல்லும் சீன கப்பலின் நடமாட்டத்தை இந்திய கடற்படை கண்காணிக்கின்றது சீன கப்பல் ஆகஸ்ட் நடுப்பகுதியில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடையும் என அறியமுடிகின்றது.
இவ்வாறான கப்பல்கள் சீனாவோ அல்லது வேறு எந்த நாடோ ஏவுகணை பரிசோதனையை மேற்கொள்ளும்வேளையே புறப்படத்தொடங்கும் என தெரிவித்துள்ள பாதுகாப்பு தரப்பினர் இது போர்கப்பல் இல்லை, இவ்வாறான கப்பல்கள் முன்னரும் இந்த பகுதியில் நடமாடியுள்ளன நாங்கள் கண்காணித்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.
சீனாவின் ஆராய்ச்சி கப்பல் விண்வெளி மற்றும் செய்மதி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.குறிப்பிட்ட கப்பல் வரவுள்ளதை முதலில் மறுத்த இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு பின்னர் 11 முதல் 17ஆம் திகதிக்குள் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்துநிற்க்கும் என்பதை உறுதி செய்துள்ளன.
Discussion about this post