இலங்கையின் கடனை மறுசீரமைப்பது தொடர்பான உடன்பாடு ஏற்படும் வரை இலங்கையில் 12 திட்டங்களுக்கான நிதியுதவியை ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனமான ஜெய்க்கா இடைநிறுத்தியுள்ளது என்று நாடாளுமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைநிறுத்தப்பட்ட திட்டங்களில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கும் திட்டமும் உள்ளது என்று துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இலங்கையின் கடனை மறுசீரமைப்பது தொடர்பான உடன்பாடு ஏற்பட்டதன் பின்னர், திட்டங்களுக்கான நிதியுதவியை மீள வழங்கத் தயார் என ஜெய்க்கா நிறுவனம் இலங்கைக்கு அறிவித்துள்ளது.
இலங்கையின் கடன் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திடம் உறுதிமொழியை ஜெய்க்கா விரும்புகின்றது. ஆயினும் உள்ளூர் நிதியுதவியுடன் ஜெய்க்கா திட்டத்தின் சில பணிகள் தொடரும் என்று சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
Discussion about this post