சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவிருக்கும் உதவிகள் கிடைப்பதற்கு இன்னும் 6 மாதங்கள் செல்லலாம் என அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
எனினும், எரிபொருள், மருந்து உட்பட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
இதேவேளை,எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக மேலும் 50 கோடி அமெரிக்க டொலரை இந்தியா, இலங்கைக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
எரிபொருள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியா இதற்கு முன்னர் 100 கோடி அமெரிக்க டொலரை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post