உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இலங்கைக்கு 3 லட்சம் யூரோ பெறுமதியான அவசர உதவிகளை வழங்க இத்தாலி தீர்மானித்துள்ளது.
உலக உணவுத் திட்டத்தின் மூலம் இந்த நிதிப் பங்களிப்பு வழங்கப்படும் என்று கொழும்பில் உள்ள இத்தாலித் தூதரகம் தெரிவித்தது.
இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச சமூகம் தனது முயற்சிகளை முடுக்கி விடுவதும், இலங்கைக்குத் தனது ஆதரவைக் காட்டுவதும் முக்கியமானது என்று இத்தாலித் தூதகரம் தெரிவித்துள்ளது.
Discussion about this post