பாகிஸ்தான் பரஸ்பர மரியாதை, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நெருக்கமான
ஒத்துழைப்பின் அடிப்படையில், இலங்கையுடனான அதனது உறவுகளுக்கு மிகுந்த
முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றும் பாகிஸ்தான் எப்போதுமே
இலங்கைக்கு நிபந்தனையற்ற ஆதரவை அனைத்து அரங்குகளிலும் அளித்து
வருவதாகவும், அது எப்போதும் தொடரும் என்றும் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர்
மேஜர் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது சாத் கட்டக் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை வாழ் பாகிஸ்தானிய
சமூகத்தினர் பாகிஸ்தானின் 75 ஆவது சுதந்திர தின “வைரவிழாவை” இன்று
சனிக்கிழமை கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில்
கொண்டாடினர்.
இதன்போதே பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது சாத்
கட்டக் மேற்கண்டவாறு தெரிவித்தார்
Discussion about this post