அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஒருவர் இறந்த தனது தந்தையை AI தொழில்நுட்பம் கொண்டு மீண்டும் உயிர்த்தெழ வைப்பேன் என கூறியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் இறந்தவர்களை மீண்டும் வரவழைக்க முடியுமா என்ற ஆய்வுகள் அதிகரித்துள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த ரே குர்ஸ்வீல் என்ற ஆராய்ச்சியாளர் தனது 22ஆம் வயதில் இறந்த தந்தையை மீண்டும் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் நடந்த அவரது முயற்சியில் ஈடுபட்டு வரும் அவர், தனது தந்தையின் கடிதங்கள், கட்டுரைகள் மற்றும் இசை அமைப்புகளை செயற்கை நுண்ணறிவுக்கு கொடுப்பதன் மூலம், தனது தந்தையின் பிரதியை உருவாக்கினார்.
இதற்காக அவர் நானோ தொழில்நுட்பம் மற்றும் தந்தையின் புதைக்கப்பட்ட எலும்புகளில் இருந்து DNAவை பயன்படுத்தி, அவர் தனது தந்தையை மீண்டும் உயிர்ப்பிக்க தற்போது இன்னும் அதிக லட்சியத் திட்டங்களை கொண்டுள்ளார்.
எனினும், ‘Dad Bot’ என்பதன் மூலம் Kurzweil தனது தந்தையுடன் பேசியதாக கூறியுள்ளார். ‘உண்மையில் நான் அவருடன் உரையாடினேன், அது அவருடன் பேசுவதைப் போல் உணர்ந்தேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
‘போதுமான தகவல்களைக் கொண்டிருப்பதன் மூலம், வேறொருவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெரிய மொழி மாதிரியை எங்களால் உருவாக்க முடியும்.
நானோ இயந்திரங்கள் (Tiny robots) ஒருமைக்குப் பிறகு எனது தந்தையை உடல் ரீதியாக உயிர்த்தெழுப்ப முடியும்’ என்றார்.
அத்துடன் 2045ஆம் ஆண்டளவில் மக்கள் தங்கள் மூளையை இயந்திரங்களுடன் இணைப்பார்கள் என்றும் அவர் கணித்துள்ளார்.
Discussion about this post