இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 30 ரூபா விலையில் உணவு உற்பத்தியாளர்களுக்கு வழங்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் சந்தைக்கு விடப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நாட்டில் முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அண்மையில் தீர்மானித்ததுடன், அதன்படி 02 மில்லியன் முட்டைகளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
அரசாங்க பல்வேறு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனங்களுக்கு மாத்திரம் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.
Discussion about this post