தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பொருள்களின் இறக்குமதியை முன்னுரிமை அடிப்படையில் இலகுபடுத்துவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
பல்வேறு தரப்புகளிலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளூர் கைத்தொழில்களுக்கு தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், இருப்புக்களை பாதுகாப்பதற்கும் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் விரும்புகின்து என்று சியாம்பலாபிட்டிய கூறினார்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படலாம் அல்லது அத்தியாவசியமானவை அல்ல என்ற அடிப்படையில் இந்தப் பொருள்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.
Discussion about this post