அட்டுலுகமவில் 9 வயதுச் சிறுமி பாத்திமா ஆயிஷாவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ள சந்தேகநபர், இதற்கு முன்னரும் பாலியல் துஷ்பிரயோக முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது தற்போது தெரியவந்திருக்கின்றது.
கடந்த பெப்ரவரி மாதம் சந்தேகநபர், பாலியல் துஷ்பிரயோக முயற்சி ஒன்றில் ஈடுபட்டபோதும், அது பலிக்காது தப்பியோடியுள்ளார். அது தொடர்பாக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
அட்டுலுகமவில் உள்ள முன்பள்ளி ஆசிரியர் ஒருவரையே சந்தேகநபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்திருக்கிறார். அந்தப் பெண் இரவு தனது இரு பிள்ளைகளுடன் உறங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டுக்குள் நுழைந்த சந்தேகநபர், பெண்ணின் வாயை அடைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார்.
அந்தப் பெண் கண்விழித்து சத்தமிட்டதால் சந்தேகநபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார் என்று கூறப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக அப்போது முறைப்பாடு அளித்தும் பொலிஸார் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
அப்போது பொலிஸார் தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால், சிறுமி ஆயிஷாவுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Discussion about this post