அமெரிக்காவில் இரு பெண்களை திட்டமிட்டு கொடூரமான வகையில் கொலை செய்த வழக்கில் தன்னை டெட்பூல் கில்லராக சித்தரித்துக் கொண்ட வேட் வில்சனுக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.இந்த கொலை சம்பவங்கள் கடந்த 2019-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் புளோரிடா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த வேடு வில்சன். டெட்பூல் கில்லர் படத்தில் வரும் கதாபாத்திரத்தின் பெயர் வேடு வில்சன். தனது பெயரும் அதே என்பதால் தன்னை டெட்பூல் கில்லராக சித்தரித்துக் கொண்டார். மேலும் தனது உடலில் டெட்பூல் கில்லர் என பச்சைக்குத்தியுள்ளார். வேடு வில்சன் முதலில் மெல்டன் என்ற பெண்ணை கொடூரமாக கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.அதற்கு முன்னர் இருவரும் போதைப்பொருள் உட்கொண்டு உடலுறவு வைத்துள்ளனர். பின்னர் கொலை செய்யப்பட்ட கிறிஸ்டைன் மெல்டனில் (வயது 35) காரை திருடிக் கொண்டு, அவரது போனை பயன்படுத்தி தனது பெண் தோழியான மெலிஸ்சா மோன்டனேஸ்-க்கு (வயது 41) போன் செய்துள்ளார்.அவர் வில்சனை நம்பி வர, பெண் தோழியை அடித்து உதைத்துள்ளார். மேலும் காரில் ஏற வற்புறுத்தியுள்ளார். ஆனால் மெலிஸ்சா மோன்டனேஸ் காரில் ஏற மறுத்து விட்டார்.இதனையடுத்து வில்சன் காரை எடுத்து புறப்பட்ட வேளை கேப் கோரல் பகுதிக்கு செல்லும்போது சாலையில் ரூய்ஸ் என்ற பெண்ணை காரில் ஏற்றிய வில்சன், கார் கொஞ்ச தூரம் சென்றபின், அவரையும் கழுத்தை நெரித்து காரில் இருந்து வெளியே தள்ளியுள்ளார்.உயிரிழந்துவிட்டார் என்பதை உறுதி செய்யும்வரை காரை திரும்ப திரும்ப அவர் மீது ஏற்றியுள்ளார். இதெல்லாம் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து வேட் வில்சனுக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது
அமெரிக்காவில் இரு பெண்களை திட்டமிட்டு கொடூரமான வகையில் கொலை செய்த வழக்கில் தன்னை டெட்பூல் கில்லராக சித்தரித்துக் கொண்ட வேட் வில்சனுக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.
இந்த கொலை சம்பவங்கள் கடந்த 2019-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் புளோரிடா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த வேடு வில்சன். டெட்பூல் கில்லர் படத்தில் வரும் கதாபாத்திரத்தின் பெயர் வேடு வில்சன். தனது பெயரும் அதே என்பதால் தன்னை டெட்பூல் கில்லராக சித்தரித்துக் கொண்டார். மேலும் தனது உடலில் டெட்பூல் கில்லர் என பச்சைக்குத்தியுள்ளார்.
வேடு வில்சன் முதலில் மெல்டன் என்ற பெண்ணை கொடூரமாக கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
அதற்கு முன்னர் இருவரும் போதைப்பொருள் உட்கொண்டு உடலுறவு வைத்துள்ளனர்.
பின்னர் கொலை செய்யப்பட்ட கிறிஸ்டைன் மெல்டனில் (வயது 35) காரை திருடிக் கொண்டு, அவரது போனை பயன்படுத்தி தனது பெண் தோழியான மெலிஸ்சா மோன்டனேஸ்-க்கு (வயது 41) போன் செய்துள்ளார்.
அவர் வில்சனை நம்பி வர, பெண் தோழியை அடித்து உதைத்துள்ளார். மேலும் காரில் ஏற வற்புறுத்தியுள்ளார். ஆனால் மெலிஸ்சா மோன்டனேஸ் காரில் ஏற மறுத்து விட்டார்.
இதனையடுத்து வில்சன் காரை எடுத்து புறப்பட்ட வேளை கேப் கோரல் பகுதிக்கு செல்லும்போது சாலையில் ரூய்ஸ் என்ற பெண்ணை காரில் ஏற்றிய வில்சன், கார் கொஞ்ச தூரம் சென்றபின், அவரையும் கழுத்தை நெரித்து காரில் இருந்து வெளியே தள்ளியுள்ளார்.
உயிரிழந்துவிட்டார் என்பதை உறுதி செய்யும்வரை காரை திரும்ப திரும்ப அவர் மீது ஏற்றியுள்ளார். இதெல்லாம் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வேட் வில்சனுக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது
Discussion about this post