தென்னிலங்கையில் காவல்நிலையமொன்றில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட இரு குழுக்கள் காவல்நிலையத்தில் வைத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
காலி ஹிக்கடுவ காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட இருக்குழுக்கள் வன்முறையில் ஈடுபட்டதன் காரணமாக 5 பெண்கள் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹிக்கடுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெலிகம கடற்கரையில் படகொன்று சேதப்படுத்தப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொள்வதற்காக முறைப்பாட்டாளர்கள் குழுவும், பிரதிவாதிகள் குழுவும் காவல்நிலையத்திற்கு அழைக்கப்பட்ட போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் ரத்கம மற்றும் தொடந்துவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரிடம் இருந்த கூரிய ஆயுதங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post