மின் உற்பத்தி நிலையங்களுக்கு அவசியமான உலை எண்ணெய் கையிருப்பு தீர்ந்து வருகின்றது என்று மின்சார பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.
களனி திஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் ஒன்றிணைந்த வலையத்தில், நாளொன்றுக்கு அவசியமான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளது. சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் 2 மின் பிறப்பாக்கிகளுக்கும், 4 நாள்களுக்கு மாத்திரமே உலை எண்ணெயே உள்ளது.
மேற்கு முனைய மின் உற்பத்தி நிலையத்துக்கு 2 நாள்களுக்கு அவசியமான உலை எண்ணெய்யே கையிருப்பில் உள்ளது. உலை எண்ணெய்யைப் பெற்றுக்கொள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளபோதும், இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post