இராணுவ வானூர்தி ஒன்று நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து, தலைகீழாக தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், பயணித்த அனைவரும் பலியாகியுள்ளனர்.
கொலம்பிய இராணுவத்தினர் வானூர்தி தொடர்புடைய சம்பவத்தை காணொளியாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
அந்த வானூர்தியானது கொலம்பிய இராணுவத்திற்கு சொந்தமானது எனவும், கட்டுப்பாட்டை இழந்து, திகிலை ஏற்படுத்தும் வகையில் சுழன்று பின்னர் தரையில் விழுந்துள்ளது
இந்த நிலையில், கொலம்பிய அதிபர் Gustavo Petro தமது டுவிட்டர் பக்கத்தில் குறித்த சம்பவத்தை உறுதி செய்துள்ளதுடன், அதில் பயணித்த நான்கு இராணுவ அதிகாரிகளுக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பவம் நடந்த பகுதிக்கு அதிகாரிகள் தரப்பு உடனடியாக செல்ல வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post