இலங்கை முழுவதும் இன்று விசேட இராணுவப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொழும்பு நகரம் உட்பட நாட்டின் முக்கியமான இடங்களில் இன்று காலை முதல் கவச வாகனங்களுடன் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விசேட படையணியின் மோட்டார் சைக்கிள் பிரிவு கொழும்பு நகரப் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதும் நேற்றும் அரசாங்கத்துக்கு எதிரான மக்களின் போராட்டங்கள் தீவிரமாகியிருந்தன.
பல இடங்களில் ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டதுடன், சொத்துக்களும் சேதமாக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இன்று நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அதிகளவான இராணுவத்தினர் கவச வாகனங்கள் சகிதம் களமிறக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post