புன்னாலைக்கட்டுவன் சந்தியில் நேற்று நடந்த விபத்தில் 9 மாதக் குழந்தை உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். சைக்கிளில் பயணித்தவர்கள் மீது இராணுவத்தினரின் உபயோகத்தில் உள்ள கார் மோதி விபத்து நடந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
தங்களது 9 மாதக் குழந்தையுடன் தம்பதி சைக்கிளில் பயணித்தபோது, பலாலி நோக்கிப் பயணித்த இராணுவத்தினருக்குச் சொந்தமான கார் சைக்கிளுடன் மோதியது என்று தெரிவிக்கப்படுகின்றது. சைக்கிளில் பயணித்த மூவரும் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காரைச் செலுத்திய 24 வயது இராணுவச் சிப்பாய் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார் என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post