தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலக்கிக் கொள்வதாக இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அறிவித்துள்ளார்.
கொழும்பில் தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகளின் ஊடக சந்திப்பு நடைபெற்று வருகின்றது.
அதில் கருத்துத் தெரிவித்த வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரை அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கியதன் ஊடாக அரசாங்கம் பெரும் தவறைச் செய்துள்ளது என்றார்.
விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பிலவுக்கு நீதி கிடைக்கும் வரையில் அமைச்சராகச் செயற்பட முடியாது என்றும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
Discussion about this post