நாட்டை முற்றாக முடக்கி அதன் மூலம் நாளாந்தம் 15 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் அறிவித்துள்ளார்.
கொவிட்-19 வைரஸ் வேலைகளுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரம் சீர் குலைவதற்கு இடமளிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் யுத்த தளபாடங்களை பெற்றுக்கொள்ள பாரிய அளவிலான நிதி தேவைப்பட்டது. அதேபோன்று தற்சமயம் கொவிட் வைரஸ் பரவும் இந்த சந்தர்ப்பத்திலும் சுகாதார உபகரணங்களை கொள்வனவு செய்யவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பாரியளவிலான பொருளாதாரமே அரசாங்கத்திற்கு அவசியம் என்றும் அவர் கூறினார்.
நாட்டின் சனத்தொகையில் 60 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அன்றாடம் வருமானம் பெறுபவர்கள். நாட்டை முற்றாக முடக்குவதன் மூலம் இவர்களின் வருமானம் முழுமையாக தடைப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்..
Discussion about this post