இராஜாங்க அமைச்சர்கள் குழுவொன்று இன்று பதவியேற்கும் என்று அரசாங்க உள்ளகத் தகவல்கள் தெரிவித்தன. ஆயினும் அதை உறுதிப்படுத்த முடியவில்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனைத்துக் கட்சி அரசாங்கம் அமைக்கும் முயற்சிகள் தொடர்ந்தும் இழுபறியிலேயே உள்ளது. பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்துக் கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க மறுத்துவரும் நிலையில், ஆளும் கட்சியினர் அமைச்சுப் பதவிகளுக்காக ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கடும் அழுத்தங்களை அடுத்து இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என்று தெரியவருகின்றது.
இன்று சுமார் 30 பேர் வரையில் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறப்படுகின்றது.
Discussion about this post