Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

இரவின் நிழல் உண்மையைக் கூறிய பார்த்திபன்! – வெட்கத்தில் சிவந்த ப்ரிகிடா!!

July 21, 2022
in சினிமா
இரவின் நிழல் உண்மையைக் கூறிய பார்த்திபன்! – வெட்கத்தில் சிவந்த ப்ரிகிடா!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இரவின் நிழல் திரைப்படம் 32 வருட முயற்சி மற்றும் இரண்டரை வருட கடின உழைப்பு என அப்படத்தின் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

மதுரை செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் சினிமாஸ் திரையரங்கில் திரையிடப்பட்டுள்ள இரவின் நிழல் திரைப்படத்தை பார்த்த ஆண், பெண் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுடன் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் உள்ளிட்ட படக்குழுவினர் திரைப்படம் குறித்து கலந்துரையாடினார்கள்.

அதற்கு முன்னர் செய்தியாளர்களுடன் இயக்குநர் பார்த்தீபன் கலந்துரையாடினார்.

இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் நன்றி. மேலும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் போன்றோர் படங்களை தான் காலை 4 மணிக்கு எல்லாம் ரசிகர்கள் தியேட்டரில் பார்ப்பார்கள். ஆனால் என்னுடைய இந்தப் படத்தையும் காலை நான்கு மணிக்கு எல்லாம் தியேட்டரில் ஆரவாரத்துடன் பார்த்த மக்களுக்கு நன்றி என்றார்.

இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கு சம்பந்தமில்லாத புது விதமான முயற்சி. சினிமாவை எப்படி எடுக்கிறார்கள் என்பதை மக்களுக்கு போட்டு காண்பித்து சிங்கிள் சொட் பற்றி விளக்கமாக கூறி இந்த படத்தை எடுத்துள்ளேன். இந்த படம் என்பது ரத்தமும் சதையும் கூடியதான உண்மையான ஒரு படம். முதலில் உலகத்தரமான படமாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். உலகத்தரமான படம் என்பது எதார்த்தத்தை வெளியில் கொண்டு வருவது தான் என்பதை நான் காண்பித்து இருக்கிறேன்.

நான் தாய்மை மற்றும் பெண்கள் புனிதமாக வாழ்க்கையைத் தொடங்குவது தொடர்பான விடயங்களைக் கூறியுள்ளேன். அதில் எந்த கவர்ச்சியும் இல்லை. முகம் சுளிக்கக்கூடிய எந்த விஷயமும் இல்லை. நான் தமிழகம் முழுவதும் நிறையத் திரையரங்குகளுக்கு சென்று வருகிறேன். நிறைய பெண்களைப் பார்க்கிறேன். இந்தத் திரைப்படத்தை பார்ப்பதற்கு நிறைய பெண்கள் வந்திருப்பதை பார்க்கிறேன் அவர்களிடம் முகம் சுளிப்பது போல காட்சிகள் இருக்கிறதா என்று கேட்டால் யாரும் இல்லை என்று தான் சொல்கிறார்கள் இதையே எனது வெற்றியாக நினைக்கிறேன்.

இந்த படத்தை வைத்து நான் ஒரு பைசா கூட வியாபாரம் செய்யவில்லை. ரசிகர்கள் வந்து பார்க்கும் டிக்கெட் பணம் தான் எனக்கு மிச்சம் என்னுடைய நேர்மையான உழைப்புக்காக என்னுடைய பொருளாதாரம் சறுக்கினாலும் பரவாயில்லை என இந்த படத்தை எடுத்துள்ளேன். உங்களது வரவேற்பிற்கு நன்றி. 32 வருட முயற்சி இரண்டரை வருட உழைப்பு இந்த படம் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags: iravin nizhalஇரவின் நிழல்பார்த்திபன்ப்ரிகிடா
Previous Post

போராட்டம் தொடரும் – காலிமுகத்திடலில் இருந்து வெளியான அறிவிப்பு!!

Next Post

தமிழர் தரப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற ரணில் இணக்கம்!

Next Post
தமிழர் தரப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற ரணில் இணக்கம்!

தமிழர் தரப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற ரணில் இணக்கம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.