எஹலியகொட தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார 34,829 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 24,209 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 17,477 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1814 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த தேர்தல் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 103,290 ஆகும்.
1,559 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 81,526 ஆகும்.
மேலும், அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 83,085 ஆகும்.
பெல்மடுல்ல தேர்தல் தொகுதிநடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 27,599 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 25,573 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 16,826 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1706 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தபால் மூல வாக்குகள்
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 19,185 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 6,641 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4,675 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 500 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
திலித் ஜயவீர 251 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
முன்னிலையில் அநுர..
இந்த முடிவுகளின் படி, இரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்குகளில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post