பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தனது அமெரிக்க இரட்டைக் குடியுரிமையை கைவிட தீர்மானித்துள்ளார் என்று நம்பகரமான வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
தற்போது அது தொடர்பான ஆவணங்களை பஸில் ராஜபக்ச தயாரித்து வருகின்றார் என்றும், ஆவணங்களை அமெரிக்க அதிகாரிகளிடம் கையளித்ததன் பின்னர் பஸில் ராஜபக்ச நாடு திரும்பவுள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
தனது முழு நேரத்தையும் அரசியலுக்காக அர்ப்பணிக்கவும், வந்தவுடன் மொட்டுக் கட்சியை மறுசீரமைக்கவும் அவர் தீர்மானித்துள்ளார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
பஸில் ராஜபக்சவை இலக்கு வைத்து 22ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது என்றும், அவரது அரசியலை முடிவுக்கு கொண்டு வரவே இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டது என்றும் அவரது ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதேவேளை முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராவதற்கோ எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதனால் இரட்டைக்குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கக்கூடாது என்ற 22ஆ வது திருத்தச் சட்டத்தால் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post