இரசாயன உரத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக எதிர்க்கட்சி
நீதிமன்றத்தை நாடியுள்ளது.
இரசாயன உர இறக்குமதி மற்றும் பாவனையை தடை செய்வதற்கு அமைச்சரவை கடந்த
ஏப்ரல் 27 ஆம் திகதி எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி
ஐக்கிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித்
மத்துமபண்டார, ஐக்கிய விவசாய முன்னணியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார
மற்றும் விவசாய முன்னணியின் செயலாளர் ஆகியோர் இன்று அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
ReplyForward |
Discussion about this post