தனது தந்தை மஹிந்த ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேற மாட்டார் என்றும், அவர் இரகசியமான இடம் ஒன்றில் பாதுகாப்பாக உள்ளார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச இன்னமும் நாடாளுமன்ற உறுப்பினராகவே உள்ளார் என்றும், புதிய பிரதமர் தெரிவில் அவர் முக்கியமான பங்கை வகிப்பார் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச நாட்டின் சூழ்நிலை கருதித் தற்போது இரகசிய இடம் ஒன்றில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளார் என்றும், அவருடன் நாம் தொடர்பில் இருக்கின்றோம் என்று நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Discussion about this post