நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச தனது குழந்தையுடன் நேற்று அதிகாலை சிங்கப்பூர் ஊடாக பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றுள்ளனர் என்று தெரியவருகிறது.
லிமினி ராஜபக்ச மற்றும் அவரது குழந்தை ஆகியோர் இன்று அதிகாலை 12.05 அளவில் சிங்கப்பூர் எயாலைன்ஸ் சேவைக்கு சொந்தமான விமானத்தில் கட்டுநாயக்கவில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
மனைவி மற்றும் குழந்தை ஆகியோரை இரகசியமான முறையில் அனுப்பி வைப்பதற்காக நாமல் ராஜபக்ச இன்று அதிகாலை விமான நிலையத்திற்கு சென்றிருந்தார் என விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post