மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி (Kandy) , நுவரெலியா (Nuwara Eliya), காலி (Galle) மற்றும் மாத்தறை (Matara) மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதனை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (25) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை
அந்தவகையில், ஊவா மாகாணத்திலும் அம்பாறை (Ampara) மற்றும் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை (Trincomalee), மாத்தளை (Matale) மற்றும் மொனராகலை (Monaragala) மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-45)கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post