Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஆன்மீகமும் ஜோதிடமும்

இன்றைய ராசி பலன்கள் 27-03-2023

March 27, 2023
in ஆன்மீகமும் ஜோதிடமும், முக்கியச் செய்திகள்
இன்றைய ராசி பலன்கள் 21-03-2023
0
SHARES
Share on FacebookShare on Twitter

27.03.2023 திங்கள் கிழமை சுபகிருது வருடம் பங்குனி மாதம் – 13ம் நாள்

நல்ல நேரம் காலை: 6.30 – 7.30; மாலை: 4.30 – 5.30
எமகண்டம் காலை: 10.30 – 12.00
இராகு காலம் காலை: 7.30 – 9.00
குளிகை: மதியம்: 1.30 – 3.00

பொது: வளர்பிறை. சஷ்டி திதி மாலை 5.28 மணி வரை; பிறகு சப்தமி. ரோஹிணி நட்சத்திரம் மாலை 3.27 மணி வரை;
பிறகு மிருகசீரிடம். யோகம்: அமிர்த யோகம்.

மேஷம்:

மேஷம்: கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். தோற்றப் பொலிவு கூடும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு.  உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

ரிஷபம்

ரிஷபம்:  ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த இடத்தில் தொட்டாலும் பல முறை முயன்று முடிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் வேலையாட்களால் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்

மிதுனம்: கணவன் – மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். நீங்கள் போராடி வெல்லும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். சொந்த பந்தங்களின் வருகையால் வீடு களை கட்டும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு ஆலோசனை தருவீர்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.

சிம்மம்

சிம்மம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நண்பர்களால் அனுகூலம் உண்டு. வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சியால் முன்னேறும் நாள்.

கன்னி

கன்னி: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கண்டும் காணாமல் சென்றவர்கள் வலிய வந்து பேசுவார்கள்.  சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

துலாம்

துலாம்: சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டி இருக்கும். நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள் . உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகளை ஏற்பீர்கள். நட்பால் ஆதாயம் அடையும் நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். புது பொருள் வந்து சேரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தால் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். காரியம் சித்தியாகும் நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம் – பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

கும்பம்

கும்பம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலை கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

Tags: #Astrology#Horoscope#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsஇராசிபலன்
Previous Post

பேருந்து கட்டணம் குறைப்பு!

Next Post

படகில் இந்தியா பயணிப்பவர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

Next Post
படகில் இந்தியா பயணிப்பவர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

படகில் இந்தியா பயணிப்பவர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.